பழுதான சாலைகள் சீரமைப்பு..அமைச்சர்

ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை திட்டத்தால் பழுதடைந்த சாலைகள் நாள்தோறும் விபத்துக்குள் சிக்கும் பொதுமக்கள் விரைவில் சரி செய்யப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் பாதாளச் சாக்கடை திட்டத்திற்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் மற்றும் தெருக்களில் குழாய் பதிக்கும் பணி கடந்த ஒரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது தற்போது பணிகள் ஒரு சில இடங்களில் நிறைவுற்று நிலையில் தோண்டப்பட்ட சாலைகளை சரியாக மூடாமல் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலைகள் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட முடியாது

ரோட்டில் மண் புழுதி தூசிகள் பறக்கின்றன தற்போது கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையின் காரணமாக சாலைகளில் சாகதிகளும் நிரம்பி உள்ளதால் விபத்துக்கள் அதிக அளவில் ஆகின்றது இதுகுறித்து இராஜபாளையம் பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை இந்த சூழ்நிலையில் இன்று இராஜபாளையம் நகருக்கு வருகை புரிந்த பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பின்போது இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் பாதாளசாக்கடை திட்டம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை விரைவாக நடைபெற்று வருகிறது இருந்தாலும் சரிவர சாலைகள் சரிசெய்யாமல் பள்ளம் இருப்பதாக மக்கள் கோரிக்கை வைத்தனர் அதை நானும் நேரில் பார்த்தேன் விரைவில் இந்த பணிகள் முடிவடைந்து சாலைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்தில் அனைத்து சாலைகளும் போடப்படும் என கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: