மணல் திருட்டு பத்து பேர் கைது

மதுரை அருகே லாரிகளில் மணல் திருடிய பத்து பேர் கைது

லாரிகள், பணம் பறிமுதல்

மதுரை

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே பெருமாள் கோவில்பட்டியில், அரசு அனுமதியின்றி மணல் அள்ளிய பத்து பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்ட தனிப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீஸார் பெருமாள் கோவில்பட்டி பகுதியில் ரோந்து சென்றதாகவும், மணல் அள்ளியதாக அலெக்ஸ் பாண்டியன் உள்பட பத்து பேரை கைது செய்தும், மணல் அள்ள பயன்படுத்திய டிப்பர் லாரிகள், இயந்திரங்கள், இரு சக்கரவாகனங்கள், ரொக்கப் பணம் ரூ. 50 ஆயிரத்தையும் போலீஸார் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: