ஊதியம் வழங்கக்கோரி மண்டல அலுவலகம் முற்று கை…

கொரோனா தடுப்பு பணிக்கான ஒப்பந்த பணியாளர்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்தும் உடனடியாக ஊதியம் வழங்கக்கோரியும் பா.ம.க தலைமையில் ஒப்பந்த பணியாளர்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகை

மதுரையில் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக ஒப்பந்த ஊதிய அடிப்படையில் பணியாளர்கள் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வருகின்றனர் இதல் பட்டதாரி இளைஞர்கள் , பெண்கள் என அனைவரும் பணி செய்து வருகின்றனர் இந்நிலையில் மாநகராட்சி மண்டலம் 4 க்கு உட்பட்ட 80 வது வார்டியில் பணி செய்த 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஒப்பந்ததாரர் ஊதியம் வழங்கவில்லை இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டும் எந்த பதிலும் கிடைக்காத நிலையில் இன்று மண்டல அலுவலசம் 4 ல் பா.ம.க இளைஞர் அணி மாநில துணை பொது செயலாளர் மாரிச் செல்வம் மற்றும் மாநில துணை பொது செயலாளர் கிட்டு தலைமையில் பணியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர் பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: