கைதி மூச்சு திணறி இறப்பு..

*ஆயுள் தண்டனை கைதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம்*

மதுரை:

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறை கைதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் பலியானார்.

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகாவை சேர்ந்தவர் ராஜா என்ற துபாய் ராஜா. இவர் கடந்த 1990 ஆயுதங்களை வைத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிறைத்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கரிமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: