படம்

அதிமுக பேச்சாளர்கள் 5 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி…..
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்……

அதிமுக கட்சியின் தலைமை கழக பேச்சாளர்கள், கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதை கேள்விப்பட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 5 தலைமை கழக பேச்சாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் வழங்கினார்.
அதிமுக தலைமை கழக பேச்சாளர்கள் சிவகாசி சின்னத்தம்பி, அருப்புக்கோட்டை சரவெடி சமஸ்கனி , விருதுநகர் இளந்தளிர் பழனிகுமார், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கை கணபதி, தீக்கனல் லட்சுமணன் ஆகிய 5 பேருக்கும், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிதி உதவி வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், சிவகாசி நகர செயலாளர் அசன்பதுருதீன், சிறுபான்மை பிரிவு செயலாளர் செய்யது சுல்தான் இப்ராகிம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், நகர அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், இளைஞரணி செயலாளர் கார்த்திக் உட்பட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: