தமிழக முதல்வருக்கு வரவேற்பு…

முதல்வர்
எடப்பாடி
பழனிச்சாமிக்கு மானாமதுரையில் உற்சாக வரவேற்பு.

அமைச்சர், ஆட்சியர் பங்கேற்றனர்.

சிவகங்கை:

கோரானா ஆய்வு கூடத்தில் பங்கேற்க மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

சிவகங்கை மாவட்டத்தின் ஆற்றல் மிக்க அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க, செயலாளர்,மற்றும் முன்னாள் எம்.பி., செந்தில்நாதன், ஆகியோர் முதல்வரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். புன்முறுவல் பூத்த முகத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பை ஏற்றார்.

மாநில இளைஞர் அணியின் துணை செயலாளர் கருணாகரன், "ஆவின்" சேர்மன் அசோகன், "மத்திய கூட்டுறவு வங்கி" சேர்மன் ராஜா,"பாம்கோ" சேர்மன் ஏ. வி. நாகராஜன், துணை தலைவர் காரைக்குடி மெய்யப்பன்,, மானாமதுரை நகர செயலாளர் விஜிபோஸ் ,
இளைஞரணி நகர செயலாளர் அழகுபாண்டி, மற்றும் மாவட்ட "ஒட்டுமொத்த" அதிமுகவினர் முதல்வர் வரவேற்பில் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக தாரை தப்பட்டை முழங்க, தொண்டர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமல், அதே சமயம் உற்சாகம் மிகுந்து காணப்பட்டனர்.

மதுரையில் இருந்து கார் மூலம் வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன்,கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, உரக வளர்ச்சி மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார், மற்றும் பல்வேறு துறை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் , காவல்துறை உயர் அதிகாரிகளும், வந்தனர்.

முனதாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகையை முன்னிட்டு சிவகங்கை போலீஸ் எஸ்.பி. ரோஹித்நாதன் , மேற்பார்வையில் மானாமதுரை சரக போலீஸ் டி எஸ் பி.
சுந்தரமாணிக்கம், தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: