ரேசன் கடைக்கு இடம்..எம்எல்ஏ. ஆய்வு

இராஜபாளையம் அருகே அய்யனாபுரம் பகுதியில் புதிதாக நியாய விலை கடை அமைப்பதற்க்கான இடத்தை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு தனிநியாய விலைகடை வேண்டுமென சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்

இதனடிப்படையில் அய்யனாபுரம் பகுதியில் புதிதாக நியாயவிலை கடை அமைக்க சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் அவர்கள் அமையவுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதியில் கட்சியின் மூத்த உருப்பினர்கள் மற்றும் நலிவுற்றவர்களுக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வீட்டிற்க்கு சென்று நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: