சாவில் மர்மம்..பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை வாடிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் திருட்டு நடந்த நிலையில் காவலாளி கணேசன் என்பவர் இன்று காலை தனியாருக்கு சொந்தமான கிணற்றில் பிணமாக கிடந்ததால் பொதுமக்கள் அச்சம் சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி செம்மணி பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் டாஸ்மாக் கடையை துளையிட்டு கொள்ளை நடந்திருந்தது இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தி சென்றனர் அதன்பின்பு அதே டாஸ்மாக் கடையில் பணிபுரிந்த அதே ஊரை சேர்ந்த கணேசன் என்பவர் காணாமல் போனதால் பொதுமக்களுக்கு பலத்த அச்சம் ஏற்பட்டது இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று மாலை கடையை மீண்டும் திறக்க தயாரான நிலையில் அதனை கண்டித்து கிராம பொதுமக்கள் காணாமல் போன கணேசனை கண்டுபிடித்து தருமாறு காவல்துறையினரிடம் முறையிட்டார்கள் இந்நிலையில் இன்று காலை டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான கிணற்றில் உடல் முழுவதும் டேப் சுற்றிய நிலையில் காணாமல்போன கணேசன் பிணமாக மீட்கப்பட்டார் காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றிய உடல்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது இதனால் அந்த பகுதியே ஒரே பரபரப்பாக காணப்படுகிறது

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: