வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது..

ராஜபாளையம் அருகே சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது…..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியை சேர்ந்த 17வயது சிறுமியின் செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன், தெரியாத நம்பரில் இருந்து தவறுதலாக ராங்கால் வந்துள்ளது. இந்த தவறுதலான செல்போன் அழைப்பில், சேலம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் மகன் சிங்காரவேலன் (25) அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து சிறுமியும், சிங்காரவேலனும் போனில் பேசி வந்தனர். இதனால் இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து கடந்த 15ம் தேதி சிங்காரவேலன் சேத்தூர் பகுதிக்கு வந்து சிறுமியிடம், ஆசை வார்த்தை கூறி சேலம் மாவட்டம் ஓமலூருக்கு அழைத்துச் சென்றார். சிறுமி காணாமல் போனது குறித்து சிறுமியின் பெற்றோர், சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். சிறுமி பயன்படுத்தி வந்த செல்போனை வைத்து, போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிங்காரவேலன் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. சேத்தூர் போலீசார் ஓமலூரில் இருந்த சிறுமியை மீட்டனர். சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்ற சிங்காரவேலனை, சேத்தூர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: