திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை அவமதிப்பு, கம்யூ. கட்சி அலுவலகத்தை அவதூறாக வலைதளத்தில் பதிவிற்றதை கண்டித்து ஆர்ப்பாட்டம:

அலங்காநல்லூர், ஜூலை. 22.

சென்னையில் உள்ள கம்யூ. கட்சி அலுவலகத்தை பற்றி வலைதளத்தில் அவதூறு பரப்பியது, பெரியார் சிலை மீது காவி பூசியதைக் கண்டித்தும், அலங்காநல்லூர் கேட்டுக் கடை முன்பாக கம்யூ., விசிக, தி.க., மார்க்சீய கம்யூ. கட்சிகளைச் சேர்ந்தோர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலர் குமரேசன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக கோஷமிட்டனர்.

மதுரையில்………..
மதுரையில் ஜான்சிராணி பூங்காவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மதுரை நகர் மாவட்ட திமுக நிர்வாகி கோ. தளபதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ. என். நன்மாறன் முன்னிலை வகித்தார்.காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகி கார்த்திகேயன், மதிமுக புதூர் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இடது சாரி கட்சிகள், திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: