வீட்டின் முன்பாக மரம் வளருங்கள்”

வீட்டின் முன்பு மரம் வளர்க்க முயற்சி செய்யுங்கள்

சுவாமி யோககுரு கருடானந்தா அறிவுரை

மதுரை

முனைவர் பட்டம் பெற்றவர்கள் வீட்டின் முன்பாக மரம் வளர்க்க வேண்டும் என, சுவாமி யோககுரு கருடானந்தா சுவாமிகள் கேட்டுக் கொண்டார்.
மதுரையில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சமுதாய தொண்டாற்றியவர்களுக்கு மதிப்புறு டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில், அவர் பேசியது:
மரங்கள் அதிகம் வளர்கப்படுவதன் மூலம், மழை நன்றாக பெய்யும். மழை சரிவர பெய்தால்தான், நாட்டில் சுபிட்சங்கள் பெருகும் என்றார்.
மதுரையில் சர்வதேச தமிழ் பல்கலைக் கழகத்தின் சார்பில் சமுதாயத்தில் சிறந்து பணியாற்றிமைக்காக, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கல்லனை ஊராட்சிமன்றத் தலைவர் சேது சீனிவாசன், முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி முருகேசன் உள்ளிட்ட பலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சர்வதேச தமிழ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எம். பாண்டியராஜன், மதுரை காமராஜர் பல்கலைக் கழக முன்னாள் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். சோலைமலை, லன்டன் தமிழ் அசோசியேஷன் தலைவர் டாக்டர் எஸ். மதன் ராஜா, மீடியா கல்வியாளர் டாக்டர் எஸ். சோமசுந்தரம், சென்னை மக்கள் உரிமை சட்ட பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அடையாறு டாக்டர் எஸ். சீனிவாசன், பத்திரிகை ஆசிரியர் ஜி. ஜெயபாலன், உலக இளைஞர் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ். செந்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் சிறந்த சமுதாய சேவை ஆற்றியோர் பலர் கௌரவிக்கப்பட்டனர்.
முன்னதாக, புலவர் சங்கரலிங்கம் மதுரையின் பெருமைகள், தமிழ்சங்கத்தின் வரலாறு பற்றியும் எடுத்துரைத்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: