மலைக்கு சென்ற பக்தர்களுக்கு கொரோனாவா?

சதுரகிரி மகாலிங்கமலைக்குச் சென்ற பக்தர்கள் 4 பேருக்கு தொற்று உறுதி…..
மலைக்குச் சென்ற பக்தர்கள் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தல்…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில்
உள்ளது புகழ் பெற்ற சதுரகிரி மலை. மலை மேல் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமியை தரிசிக்க மாதந்தோறும் 8 நாட்கள் மட்டும், பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடந்த வியாழக்கிழமை மகாளய அமாவாசையன்று சுமார் 11 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் வசதிக்காக தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இந்த முகாமில் ஏராளமான பக்தர்கள் தாமாக முன் வந்து பரிசோதனை மாதிரிகள் கொடுத்துச் சென்றனர். சதுரகிரி சென்று வந்தவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்று தெரிய வந்தது. இதில் சிவகாசி, தேனி, சங்கரன்கோவில், திருவண்ணாமலையைச் சேர்ந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது, சதுரகிரி மகாலிங்கமலைக்கு சென்று வந்த பக்தர்களுக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கடந்த நான்கு நாட்களாக சதுரகிரி மலைக்குச் சென்ற பக்தர்கள், தாமாக முன் வந்து தொற்று பரிசோதனைகள் செய்து கொள்ளுமாறு அறிவுறித்தியுள்ளனர். சுகாதாரத்துறை அறிவிப்பால் சதுரகிரி மலைக்குச் சென்ற பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: