தடுப்பணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..

மதுரை விவசாயிகளின் 40 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று வைகையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்

மதுரை மாடக்குளம், கீழ மாத்தூர், துவரிமான் ஆகிய கண்மாய்களுக்கு நேரிடையாக தண்ணீர் வழங்கவும், மதுரை மாநகராட்சிக்கு உட்பட 7 வார்டுகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் மதுரை கொடிமங்கலத்தில் வைகையாற்றின் குறுக்கே 17 கோடியே 39 இலட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார், இந்த தடுப்பணை கொடிமங்கலம் கிராமத்தில் வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட உள்ளது, தடுப்பணை கட்டப்படுவதால் கண்மாய்களில் 215.89 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க முடியும், 40 ஆண்டுகளாக கொடிமங்கலத்தில் வைகையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட பேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது, மேலும் தடுப்பணையால் 3360.37 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும், மேலும் மதுரை திருமங்கலம் பிரதான கால்வாயின் 1 வது கிளை கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்வதற்காக 6.640 கிலோ மீட்டர் நீளத்திற்கு வாய்காலை 6 கோடியே 82 இலட்சத்து 53 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கும் பணியினையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொலி காட்சி வழியாக திட்டத்தை தொடங்கி வைத்தார், வாய்க்கால் சீரமைக்கும் பணியால் 1302.97 ஏக்கர் விளை நிலம் பயன் பெறவுள்ளது

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: