மருத்துவக் கல்லூரி இயக்குநர் ஆலோசனை..

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்ட அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களோ டு சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனர் நாராயண பாபு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனர் நாராயண பாபு கூறியதாவது, தென்னிந்தியாவில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை யும் ஒன்றாகும் இங்கு 3102 படுக்கை வசதிகள் உள்ளது கொரோனா காலகட்டத்தில் 1460 படுக்கைகள் பிரத்தியேகமாக உள்ளது தற்போது 416 குரு நூல்கள் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளனர், நாளொன்றுக்கு 2,500 வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர், 6867 பேர் தற்போது வரை சிகிச்சை பெற்றுள்ளனர் 5985 பேர் குணம் அடைந்து உள்ளனர் 99% குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 500 மருத்துவர்கள் 600க்கும் மேற்பட்ட செவிலியர்கள் முதுநிலைப் பட்டம் படிப்பவர்கள் 800 பேர். இந்த மருத்துவமனையில் அதிக அளவு ஆக்சிஜன் செலுத்தப்பட்டுள்ளது 22 கிலோ லிட்டர் ஆக்சிஜன் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது தற்போது 42 கிலோ லிட்டர் ஆக்சிஜனுடன் பயன்படுத்த உள்ளனர். பிளாஸ்மா தானம் செய்ய தானாக முன்வரவேண்டும் அவர்கள் விண்ணப்பங்கள் பெற்று தானாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்யலாம் 22 பேரில் 19 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளோம், ரத்த தானம் செய்வது போல் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: