மதிமுக முன்னாள் நிர்வாகி கொலை..

சாத்தூர் அருகே மதிமுக கட்சி முன்னாள் நிர்வாகி படுகொலை…..
தலைமறைவான குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்……

சாத்தூர் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (51). இவர் மதிமுக கட்சியின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினராக இருந்தவர். சிவகுமார் வீட்டின் அருகே மாரிமுத்து (28) என்பவர் வசித்து வருகிறார். கூலிவேலை பார்க்கும் மாரிமுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு மாரிமுத்து மற்றும் சிலர் குடிபோதையில் அந்தப்பகுதியில் ரகளை செய்து கொண்டிருந்தனர். இதனை சிவகுமார் கண்டித்துள்ளார். உடனே மாரிமுத்து உள்ளிட்டவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் சிவகுமார் நடைபயிற்சிக்காக வீட்டிலிருந்து நடந்து வந்து கொண்டிருந்த போது, மறைந்திருந்த மாரிமுத்து சிவகுமாரின் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த சிவகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சம்பவம் கேள்விப்பட்ட சாத்தூர் நகர் காவல் நிலைய போலீசார், சிவகுமாரின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றவாளியை கைது செய்யக்கோரி சிவகுமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். அருகில் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த மாரிமுத்துவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: