நீட் தேர்வை எதிர்த்து போராட்டம்..கைது..

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம் கைது .

மதுரை

தமிழகத்தில் நீட் தேர்வு நடத்திவரும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மருத்துவ கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் பாதை இயக்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது, இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பினர் மேலும் 13 மாணவர்களின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர், உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் போராட்டக்காரர்களை கலைந்து செல்ல காவல்துறையினர் வலியுறுத்தினர் ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்ததால் காவல்துறையினர் அவர்களை வலுகட்டாயமாக கைது செய்தனர். இதனால் ,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பேட்டி: அமுதா. மக்கள் பாதை அமைப்பு.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: