கார் டிரைவர் தலைமறைவு..

அருப்புக்கோட்டையில் போலி கடத்தல் நாடகமாடிய கார் டிரைவர்….
கார் சோதனையில் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவு…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் நல்லேந்திரன் (40). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது கார் டிரைவராக கோட்டைப்பட்டியைச் சேர்ந்த நந்தகுமார் (25) வேலை பார்த்து வந்தார். அருப்புக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்த நல்லேந்திரன், தனது காரை எடுத்து வருமாறு நந்தகுமாரை செல் போனில் அழைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து நந்தகுமார் தன்னை யாரோ, காருடன் கடத்திச் செல்வதாகவும், 20 லட்சம் பணம் கொடுத்தால் தான் தன்னை விடுவேன் என்றும், கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் நல்லேந்திரனிடம் போனில் கூறியுள்ளார். இது குறித்து நல்லேந்திரன் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ஆலடிப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நல்லேந்திரனின் கார் அந்தப்பகுதியில் வந்தது. போலீசாரை பார்த்ததும், காரை நிறுத்துவது போல வந்து, திடீரென்று அவர்களை இடிப்பது போல நடித்துவிட்டு, கார் மின்னல் வேகத்தில் சென்றது. போலீசாரும் சுமார் பத்து கிலோ மீட்டர் காரை விரட்டிச் சென்றனர். கல்லூரணிப் பகுதியில் காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். காரில் நந்தகுமார் மட்டுமே இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே நல்லேந்திரனை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் டிரைவர் நந்தகுமார் நாடகமாடியது தெரிய வந்தது. போலீசார் காரை மீட்டனர். போலி கடத்தல் நாடகமாடிய டிரைவர் நந்தகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: