சிவன் கோயில்களில் விளக்கு ஏற்ற அனுமதிக் க வேண்டும்…

நாளை மகாளய அமாவாசைக்கு சிவன் கோவில்களில் விளக்குகள் ஏற்ற அனுமதிக்க வேண்டும்…..
ஆன்மிக சிவ பக்தர்கள் சங்கம் கோரிக்கை…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஆன்மிக சிவ பக்தர்கள் சங்கம் சார்பாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் நாளை மகாளய அமாவாசை தினம். இந்த புனிதமான நாளில் சிவ பக்தர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலான மக்கள் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தி பூஜை செய்வார்கள். பலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்குவார்கள். முக்கியமாக அமாவாசை தினத்தன்று சிவன் கோவில்களில் விளக்குகள் ஏற்றி வணங்குவார்கள். தற்போது ஐந்து மாதங்கள் கழித்து இப்போது கோவில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்களும் கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனாலும் பக்தர்கள் கொடுக்கும் பூஜை பொருட்களை அர்ச்சகர்கள் வாங்க மறுக்கின்றனர். மேலும் கோவிலுக்குள் தீபங்கள் ஏற்றவும் தடை விதித்துள்ளனர். இது பக்தர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே நாளை மகாளய அமாவாசைக்கு சிவன் கோவில்களில் பக்தர்கள் விளக்குகள் ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: