ஒருகிலோ கஞ்சா..ஒருவர் கைது

மதுரையில் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது

மதுரை :

மதுரை மூலக்கரையால் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை டவுன் மூலக்கரை போலீஸ் சார்பு ஆய்வாளர் துரைப்பாண்டி நேற்றிரவு அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூலக்கரை அஞ்சலி மைதானம் அருகே சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் நின்றவரை பிடித்து விசாரணை செய்தார். இதில் அவர் மதுரையை சேர்ந்த சண்முகவேல் (45) என்பதும், அவர் வைத்திருந்த பையில் சுமார் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவும், ஒரு கத்தியும் இருந்தது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த கீரைத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சண்முகவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: