டோல்கேட் வரி ரத்து கோரி ஆர்ப்பாட்டம்..

சுங்கச்சாவடி வரி வசூலை ரத்து செய்ய வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மத்திய அரசுக்கு புறா விடும் தூது ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுகை கலெக்டர்அலுவலக நுழைவாயில் முன்பு நூதனமுறையில்ஆர்ப்பாட்டம் செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில், வாகன ஓட்டிகளிடம் சுங்கச்சாவடி வரி வசூலை ரத்து செய்ய வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமையில் நூதன முறையில் மாட்டு வண்டியை இழுத்து வந்து கைகளில் புறாக்களை கொண்டுவந்து, மத்திய அரசுக்கு தூது விடும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சிநிர்வாகிகள் பலர்கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: