பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?

மதுரை மாவட்டத்தில் பாலியல் மையப்பகுதியாக மாறிவரும் வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் விடுதிகளில் வேலை வாய்ப்பு கொடுப்பதாக இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர் என வழக்கறிஞர் விஜயகுமார் தெரிவித்தார். வாடிப்பட்டி பேரூராட்சி தாலுகா அலுவலகம் நீதிமன்றம் யூனியன் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் கோவில் தேவாலயம் உள்பட வாரச்சந்தை இயங்கி வருகிறது இங்கு சுற்று வட்டாரத்திலிருந்து கிராம பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு தேவைக்கு அதிகமாக விடுதிகள் உள்ளதாகவும் இதில் விபச்சாரம் நடந்ததாக வழக்குகள் உள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்து வழக்கறிஞர் வக்கீல் விஜயகுமார் கூறியதாவது, மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி பேரூராட்சி பாலியல் மையமாக மாறி வருவதாக தெரிகிறது இங்கு பேரூராட்சி உட்பட்ட பகுதியில் சுமார் 13 விடுதிகள் உள்ளது இங்கு கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பாக விபச்சார வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலை ஆனார்கள் அளவுக்கு அதிகமாக விடுதிகள் பேரூராட்சி விதிகளுக்கு உட்படாமல் உள்ளது இங்குள்ள விடுதிகள் அனைத்தும் பேரூராட்சி அனுமதி பெற்று உள்ளதா?என்று சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது சமீபத்தில் குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிரான இயக்க காவல் ஆய்வாளர் சாந்தி அவர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது இதன் பேரில் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பதிமூன்று விடுதிகளிலும் சோதனை நடந்தது இதில் மூன்று ப்ரோக்கர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 6 பெண்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில் அரசியல் தலையீடு உள்ளதாக பொதுமக்கள் சந்தேகப்படுகிறார்கள்.ஏனென்றால் வாடிப்பட்டி நகரம் சுற்றுலாதளம் மற்றும் பெரிய வணிக நகரம் கிடையாது.இங்கு வரக்கூடியவர்கள் அன்றாட தேவைக்கு இப்பகுதி கிராம மக்கள் வந்து செல்லக் கூடியவர்கள் தான்.ஆனால் இங்கு 13 விடுதிகள் உள்ளது இங்குள்ள விடுதியில் வெளிமாநிலத்தில் இருந்தும் வெளி மாவட்டத்தில் இருந்தும் வேலைவாய்ப்பு அளிப்பதாக இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக இப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருவதாகவும். இதனை உறுதி செய்யும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இங்குள்ள விடுதிகளில் சோதனை நடந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறி 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் ஆனால் முழுமையாக நடவடிக்கையில் எடுக்கப்பட்டிருந்தால் இன்னும் பல பேர் கைதுசெய்யப்பட்டு இருப்பார்கள் இதில் பல அரசியல் பிரமுகர்களின் மறைமுக தலையீடு இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் வருங்காலத்தில் மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி பாலியல் மையமாக மாறுவதை தடுக்க முடியும் என்று மனம் வேதனையுடன் கூறுவதாக தெரிவித்தார். உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் மதுரை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் விடுதிகளை கணக்கிட்டு முறைப்படுத்தி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: