முதல் தனியார் சித்த மருத்துவமனை..

*_கொரானா சிகிச்சைக்கான தமிழக அரசின் அனுமதி பெற்ற முதல் தனியார் வெற்றி சித்த மருத்துவமனை – மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய் துவக்கி வைத்தார்_*

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரானா வைரஸ் ஐ முற்றிலும் தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் கோவிட் 19 சிகிச்சையில் சித்த மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது.

சித்தமருத்துவத்தின் மூலம் கொரானா நோயாளிகள் பலர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரானா சிகிச்சைக்கு தனியார் அமைப்பும் சேவையாற்றி வருகிறது.

அந்தவகையில் தமிழக அரசு அனுமதி பெற்ற முதல் தனியார் சித்த மருத்துவமனை மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே தனிச்சியத்தில் கோவிட் 19 சிகிச்சைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இம்மருத்துவமனையை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் கலந்துகொண்டு துவக்கிவைத்தார்

இதில் மதுரை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன், வெற்றி சித்த மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள சுகாதார துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: