அரசின் நடவடிக்கைக்கு வியாபாரிகள் முழு ஒத ்துழைப்பு…

கொரானா காலத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு வர்த்தகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் –

வர்த்தக சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில், சிவகங்கை மாவட்ட வர்த்தக சங்க துணைத்தலைவர் முத்துச்சாமி இல்ல திருமண விழாவில், வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய விக்கிரமராஜா கொரானா வைரஸ் தாக்குதலால் உலகமே அஞ்சி வாழும் சூழ்நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு வர்த்தகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பாராட்டு தெரிவித்தார். வரும் அக்டோபர் மாதம் சிவகங்கையில் நடைபெறவுள்ள வர்த்தக சங்க மாநாட்டில், வர்த்தகர்கள் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பின்னர் காளையார்கோவில் வர்த்தக சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முக கவசம் மற்றும் கையுறைகளை விக்கிரம ராஜா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காளையார்கோவில் வர்த்தக சங்க நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: