இரு மோட்டார் சைக்கிளில் மோதல் இருவர் சாவ ு..

மதுரை அருகே இரு சக்கரவாகனங்கள் மோதி: இருவர் பலி

அலங்காநல்லூர்

மதுரை அருகே குலமங்கலத்தில் இரு சக்கரவாகனங்கள் மோதிக் கொண்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் கீழபூங்கொடியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் 38., அதே ஊரைச் சேர்ந்த மனோகரன் 62. ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில், மதுரை அருகே குலமங்கலத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மதுரை தத்தனேரியைச் சேர்ந்த சீனிவாசன் 19. மோதியதில், பிரேம்குமார், சீனிவாசன் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
சீனிவாசன் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமணையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: