மணல் கடத்திய மினி வேன், மாட்டு வண்டி பறிம ுதல்..

பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் கடத்திய மினி வேன் – மாட்டு வண்டிகள் பறிமுதல்

பேராவூரணிசெப்.12-
தஞ்சை மாவட்டம்,பேராவூரணி பகுதியில் உள்ள காட்டாறுகளில், அனுமதி இன்றி மணல் கடத்தப்படுவதாக, வரப்பெற்ற புகாரைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர் உத்தரவின் பேரில், பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி தலைமையில், பேராவூரணி சரக வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், சேதுபாவாசத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சிவமணி, கிராம உதவியாளர்கள் சிவகுமார், சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர், வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் பல்வேறு இடங்களில்
சோதனை நடத்தினர்.

இதில், ரெட்டவயல் பகுதியில் கள்ளத்தனமாக மணல் ஏற்றி வந்த இரண்டு மாட்டு வண்டிகளையும், ஆவணம் பகுதியில் கள்ளத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டு வட்டாட்சியர் சென்ற வாகனத்தை கண்டதும், அதி விரைவாகச் சென்ற டாட்டா ஏஸ் வண்டியை விரட்டிச் சென்றும் கைப்பற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: