ராஜபாளையத்தில் பதற்றம் போலீஸ் குவிப்பு..

ராஜபாளையத்தில் மீண்டும் சாலை மறியல், பதற்றம்…..
நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு…..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள முதுகுடி பகுதியை சேர்ந்த, புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த ராஜலிங்கம், இன்று காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். போலீசார் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக கூறியதையடுத்து, மக்கள் சாலை மறியலை கைவிட்டு திரும்பினார்கள். இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் ராஜபாளையம் – தென்காசி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்தப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். ராஜபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: