வேனில் கடத்தி வந்த குட்கா பறிமுதல்..

அலங்காநல்லூர் அருகே வேனில் ஐந்து லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தி வந்த இருவர் கைது:

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டியில் ஐந்து லட்சம் மதிப்புள்ள குட்காவை வேனில் கடத்தி வந்த இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே தானிப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் 35. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பெரியாம் பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் 26. ஆகிய இருவரும் சுமார் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை அலங்காநல்லூரை நோக்கி வேனில் கொண்டு வரும்போது, புதுப்பட்டியில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்த அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் நிர்மலா, வேனை மடக்கி பிடித்து, வேனை பறிமுதல் செய்தும், இருவரையும் பிடித்து வழக்குப் பதிவு செய்தார்.
இதேபோல் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் கடை ஒன்றில் விற்பனைக்கு வைத்திருந்த 250 கிலோ குட்கா பொருட்களையும், அலங்காநல்லூர் போலீஸார் கைப்பற்றி, கடையின் உரிமையாளர் சண்முகநாதனையும் கைது செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: