பெண் வெட்டி கொலை..

இராஜபாளையம் அருகே வசந்தம் நகர் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் வெட்டிப் படுகொலை. தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே வசந்தம் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரேமா (வயது 45). இவர் இன்று வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி படுகொலை செய்துள்ளனர் இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இறந்த பிரேமாவின் மகன் செந்தில்குமாரின் நண்பர் ரஞ்சித் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: