பாரதிய மஸ்தூர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மதுரை செப் 11. போக்குவரத்து துறை மின்சாரத் துறை தொலைத்தொடர்புத்துறை ரயில்வே துறை தபால் துறை போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது பெரிய அளவில் ஏற்பட்டிருக்கும் வேலை இழப்பை உடனே சரிசெய்ய வேண்டும் தொழிலாளர்கள் பாதுகாப்பு வேண்டும் போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் மின்சார துறை தொழிலாளிகளுக்கு அரசு ஊழியராக இருக்க வேண்டும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும் பாதுகாப்புத்துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்காதே ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர பணியாளராக வேண்டும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளருக்கு அரசு ஊழியராக வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் பைபாஸ் ரோட்டில் உள்ள அரசு தலைமை போக்குவரத்து கழக அலுவலகத்தில் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: