போஸ்டர் ஒட்ட வேண்டாம் என சொல்ல போஸ்டர் அ டித்த ரஜினி ரசிகர்கள்..

மதுரையில் போஸ்டர் ஒட்ட வேண்டாம் என்பதை சொல்வதற்கே போஸ்டர் அடித்த மதுரையை சேர்ந்த ரஜினி ரசிகர்கள்….மறுபுறம் 2021 தேர்தலில் இல்லையென்றால் இனி எப்பவும் இல்லை என்ற வாசக போஸ்டர்களை ஒட்டி தெறிக்க விடும் ரஜினி ரசிகர் மன்றத்தினர்….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை எதிர்நோக்கி தமிழகம் முழுவதும் கோவை வேலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் பல்வேறு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி தங்களது கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று தலைமையின் அனுமதி இல்லாமல் இனி யாரும் போஸ்டர்கள் ஒட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இனி போஸ்டர் ஓட்ட வேண்டாம் என்பதையே மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் போஸ்டர் அடித்து மதுரையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களுக்கு போஸ்டர் அடிக்க வேண்டாம் என்று தலைமை உத்தரவு எனவும் தலைவா நீ எப்போ கட்சி தொடங்கினாலும் உங்களுக்குத்தான் மக்கள் ஆதரவு எனவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க மறுபுறம் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வலியுறுத்தியும் தொடர்ந்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ரஜினிகாந்த் கூறிய வாசகத்தை குறிப்பிட்டுள்ள ரஜினி ரசிகர் மன்றத்தினர் 50 ஆண்டுகால திராவிட அரசியலால் மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே எனவும் அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் நிகழ மக்கள் மனசு மாறனும் மகாராசன் அரியணை ஏறனும் எனவும் 2021 தேர்தலில் இல்லைனா இனி எப்பவும் இல்லை என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே போஸ்டரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் பயன்பாடு குறித்தும் தற்போதைய வளர்ச்சியில் உள்ள பயன்பாடு குறித்தும் ஒப்பீடு செய்து புகைப்படங்களையும் இடம்பெறச் செய்துள்ளனர்.இந்த போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

இனி போஸ்டர் அடிக்க வேண்டாம் என்பதையே போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளதும் மறுபுறம் அதனை மீறி மறுபுறம் தொடர்ந்து போஸ்டர் ஒட்டி வருவது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: