வாழைத்தார் ஏலக்கடையால் போக்குவரத்து நெர ிசல்..

பேராவூரணி சேது சாலை முகத்தில் வாழைத்தார் ஏலக் கடையால் போக்குவரத்து நெரிசல் , விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை:

பேராவூரணி செப். 11 :
தஞ்சை மாவட்டம்,பேராவூரணி சேது சாலை முக்கம் ,பொது மக்களின் போக்குவரத்து நிறைந்த இடமாகும்.இங்கு பட்டுக்கோட்டை செல்வதற்கான பேருந்து நிறுத்தமும் உள்ளது.சேது சாலை முகத்தில் பேருந்து நிறுத்தம் பக்கத்தில் உள்ள ஏலக்கடையால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இங்கு ஏலம் விடுவதற்காக வரும் வாழைத்தார்களை சாலை வரை அடுக்கி வைத்து விடுகின்றனர்.வாழைத்தார் ஏற்றிவரும் மினி டெம்போ நடுரோட்டில் நிறுத்தி வைக்கப்படுகிறது.இதனால் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் செல்ல வழியில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அக்கடையின் பக்கத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்து வந்து நிறுத்துவதற்கு சிரமமாக உள்ளதால் பேருந்து நிறுத்தத்தை தாண்டி சென்றே பேருந்து நிறுத்தப்படுகிறது.இதனால் பேருந்து பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்த வாழைத்தார்களில் இருந்து வெட்டப்படும் கட்டை பகுதிகளை சாலையிலேயே போட்டு விடுவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தெரியாமல் அதில் ஏற்றி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் காலையில் சென்று ஏலக்கடை இடத்தை பார்வையிட்டு வாழைத்தார்களை சாலை வரை வைப்பதை தடுத்து வாகன நெரிசல் சாலை விபத்து ,வாகன விபத்து ஏற்படுவதை தவிர்த்து பொதுமக்கள் நலன் காக்க வேண்டும் எனசமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: