இம்மானுவேல் சேகரன் குருபூஜை..

அய்யூர் கிராமத்தில் இம்மானுவேல் சேகரன் உருவப் படத் திறப்பு விழாவும், கொடியேற்று விழாவும்:

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யூர் கிராமத்தில், புதிய தமிழகம் கட்சி சார்பில், இம்மானுவேல் சேகரன் உருவப் படத் திறப்பு விழாவும், கட்சி கொடியேற்று விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்மானுவேல் சேகரனின் 63-வது குருபூஜையையொட்டி நடந்த விழாவுக்கு, மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் சரவணன், மாவட்ட துணைச் செயலர் பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியச் செயலர் வெற்றிக்குமரன் வரவேற்றார்.
இம்மானுவேல் சேகரன் உருவப் படம் திறக்கப்பட்டு, கட்சி கொடியை மாவட்டச் செயலர் விஜயக்குமார் ஏற்றி வைத்தார்.
வாடிப்பட்டி ஒன்றியச் செயலர் நாகமணி, தொண்டரணிச் செயலர் கருப்புத்துரை, மக்கள் தொடர்பாளர் வினோத், பாலமேடு கார்த்திக், ஆதனூர் பாலு, அய்யூர் நாகையன், ஆட்டோ பாண்டி, முத்தையா, தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பாலமேடு, ஆதனூர் பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: