தேங்காய் விற்பணை..

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை. மதுரை விற்பனை குழு மதுரை பத்திரிக்கை செய்தி. மதுரை வேளாண்மை விற்பனை குழுவின் கீழ் இயங்கும் மேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 10.9.2020 அன்று முதன்முறையாக ஏலம் மூலம் தேங்காய் விற்பனை நடைபெற்றது.
முதன்முறையாக மேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் விற்பனைக்கென நடைபெற்ற மறைமுக ஏலத்தினை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் திருமதி.பெ. விஜயலட்சுமி அவர்கள் முன்னிலையில் மதுரை விற்பனை குழு செயலாளர் திருமதி.வி.மெர்ஸி ஜெயராணி அவர்கள் துவக்கி வைத்தார் திரு.ஜி. வெங்கடேஷ் கண்காணிப்பாளர் அவர்கள் மறைமுக ஏல முறை குறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு விளக்கிக் கூறினார்.
மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி யைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தி குழுக்கள் 4800 தேங்காய்களை இரு குவியல்களாக கொண்டு வந்தனர். மறைமுக ஏலத்தில் ஆறு தேங்காய் வியாபாரிகள் பங்குபெற்றனர். ஒரு தேங்காய் ரூபாய் 12‌.50 என்ற விலையில் 3600 காய்களை கொண்ட ஒரு குவியலும், ஒரு காய்க்கு அதிகபட்ச விலையான ரூபாய் 13/- என்ற விலையில் 1200 காய்கள் கொண்ட மற்றுமொரு குவியலும் ஏலம் முடிக்கப்பட்டு ரூபாய் 60600/- ஆனது வியாபாரிகளிடம் இருந்து பெற்று உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதனால் விவசாயிகள், உழவர் உற்பத்தி குழுக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து இனி வரும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தேங்காய் மறைமுக ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே இதனை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தேங்காய் ஏலம் தொடர்பாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கருப்பையா மேற்பார்வையாளர் மேலும் ஒரு முறை விற்பனைக் கூடம் அவர்களை 9940965965 என்ற எண்ணிலும், ஜி. வெங்கடேஷ், கண்காணிப்பாளர், மதுரை விற்பனை குழு அவர்களை 9025152075 என்ற எண்ணிலும் வெங்கடேசன், உதவி வேளாண்மை அலுவலர் அவர்களை 90473301972 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு செயலாளர், மதுரை விற்பனை குழு, மதுரை.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: