காரைக்குடி நகராட்சியை கண்டித்து ஆர்ப்பா ட்டம்..

நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

காரைக்குடி

சிவங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி நிர்வாகத்தின் சாலைப் பணிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து ஐந்து விளக்குப் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். காரைக்குடி நகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை திட்டத்தை சரியாக செயல்படுத்தமாலும் சில இடங்களில் மட்டும் பாதாளச் சாக்கடைகள் மூடப்பட்டும் சாலைகள் அமைக்கப்பட்டும் பல இடங்களில் சாலைகள் அமைக்கப்படாமல் நகரின் அனைத்து முக்கிய பகுதிகளும் குண்டும் குழியுமாக இருப்பதால் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்படுவதால் காரைக்குடி நகராட்சி நிர்வாகம் உடனடியாக அனைத்து பகுதிகளிலும் சாலைகளை அமைத்து போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் சிரமம் இல்லாத பயணத்திற்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: