அதிமுக மீது அவதூறு பரப்புவதே திமுகவின் ந ோக்கம்..அமைச்சர்

மதுரை

உயர் தொழில்நுட்ப மின்னணுவியல் வளர்ச்சியை மையமாக கொண்ட 11 வது மாநாடு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக தொழில்நுட்பதுறை சார்பில் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்ட அமைச்சர் ஆர்பி.உதயகுமார் 2024ஆம் ஆண்டிற்குள் மின்னணு பொருட்கள் உற்பத்தி துறையின் மனிதவள தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க உள்ளது குறித்தும் பயிற்சி பெற்ற பெண் ஊழியர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் பயிற்சி மானியம் வழங்கப்படும் எனவும் மின்னணு துறையில் மதிப்புக்கூட்டு அளவினை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்பி உதயகுமார்

கிசான் முறைக்கேடு தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண், வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் உரிய விசாரணை நடத்தி முறைக்கேடாக பெறப்பட்ட பணம் முழுமையாக மீட்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

அரசு ஒன்று இருந்தால் எதிர்க்கட்சி இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு ஆட்சிக்கு வர வேண்டும் அடிப்படை நோக்கம் இருப்பது இயல்பு

அதிமுக மீது சேற்றை வாரி இறைப்பது, அவதூறு பரப்புவதை திமுக மரபாக கொண்டுள்ளனர், எனவே திமுகவிடமிருந்து புதிய அணுகுமுறையை எதிர்பார்க்க முடியாது

அதிமுக மீது அவதூறு பரப்பும் காலகாலமாக பின்பற்றி வரும் அணுகுமுறையை தற்போதும் முக. ஸ்டாலின் பின்பற்றி வருகிறார், ஆனால் மக்கள் மத்தியில் பழகிப்போன மரபாகவே உள்ளது

திமுகவின் பொதுக்குழு வசைபாடும் பொதுக்குழுவாக மட்டுமே இருக்கும் வாழ்த்தும் பொதுக்குழுவாக இருக்காது

அதிமுகவில் இன்றும் பட்டியலின்னத்தை சேர்ந்தவர்களே சபாநாயகராக உள்ளனர்

அதிமுகவை பொறுத்தவரை சமத்துவம் இருக்கும்

திமுக ஆட்சியில் சத்யவாணி முத்து காலம் முதல் பட்டியலின மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறது

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: