விழிப்புணர்வு உறுதிமொழி…

சிவகங்கை மாவட்டத்தில்
"போஷான்மா" விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் விழா சிவகங்கை மாவட்டம் நேமத்தான்பட்டி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் செயல்படும்.
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரத்தைச் சார்ந்த நேமத்தான்பட்டி
அங்கன்வாடி மைய பகுதிக்கு உட்பட்ட பொது மக்களுக்கு "போஷான்மா"பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிவகங்கை வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர், மேற்பார்வையாளர்கள்,
சாக்கோட்டை வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட்டார திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் , அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,

இந்த உறுதிமொழி எடுப்பதன் மூலம் சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரப் பகுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்தின் அவசியத்தைத் தெரிந்து கொண்டு அதன்படி அன்றாடம் சரிவிகித உணவினைச் சாப்பிட அறிவுறுத்தப்பட்டது.

அங்கன்வாடி மைய அமைப்பாளர் சண்முகவள்ளி தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: