மோடி பாராட்டிய மோகன் பாஜகவில் இணைந்தார். .

மோடியிடம் பாராட்டப் பெற்றவர் பாஜகவில் இணைந்தார்

மதுரை

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவர் மோகன். இவர் தன் மகள் படிப்பு செலவுக்காக சேர்த்து வைத்திருந்த ரூ. 5 லட்சத்தை கொரோனா காலத்தில் மோகன் மகள் நேத்ரா கேட்டு கொண்டதற்கு ஏற்ப, கொரோனா நிவாரனப் பொருட்களை வாங்கி ஏழை மக்களுக்கு வழங்கினார்.
இதை சமூக ஊடகங்கள் வெளியிட்டன.
இதையடுத்து மோகன் மகள் நேத்ராவை, பாரத பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோரை பாராட்டினர்.
இதையடுத்து ஐ.நா.சபையானது, மாணவி நேத்ராவுக்கு நல்லெண்ண தூதராக நியமித்து கௌரவப்படுத்தியதுடன் பரிசுத் தொகையும் வழங்கியது.
இதையும், சலூன் கடைக்காரர் மோகன், கொரோனா நிவாரனப் பணிகளுக்கு செலவிட்டார்.
இந்த நிலையில், மோகன் மதுரைக்கு வந்த பாஜக விவசாயி அணி நிர்வாகி சீனிவாசன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: