அரசு ஊழியர்களிடம் நகை பறிப்பு: இரண்டு சி றார்கள் பிடிபட்டனர்..

அரசு ஊழியர்களிடம் நகை பறிப்பு: இரண்டு சிறார்கள் கைது

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வெவ்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்து அரசு ஊழியர்கள் இருவரிடம் செயின் பறிப்பு வழக்கில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா 43. இவர் பாலமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அலங்காநல்லூருக்கு ஆட்டோவில் வந்து இறங்கியபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கழுத்தில் கிடந்த ஒன்பதரை சவரன் செயினை பறித்து சென்றனர்.
இதேபோல, அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டியிலும், சாலையில் நடந்து சென்ற அரசு ஊழியர் காளீஸ்வரி கழுத்தில் கிடந்த ஒன்றரை சவரன் செயினையும், மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பறித்துச் சென்றனர்.
இந்த நிலையில், ராதிகா, காளீஸ்வரி ஆகிய இருவர் அளித்த புகாரின் பேரில், அலங்காநல்லூர் போலீஸார் விசாரித்து வந்த நிலையில், அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இரு சிறார்கள், இரு சக்கர வாகனத்தில் வந்தபோது போலீஸாரிடம் மாட்டிக் கொண்டனர்.
போலீஸார் விசாரானையில், மோட்டார் சைக்கிளில் சென்று நகை பறித்ததைக் ஒப்புக் கொண்டனர்.
அதன்பேரில், மதுரை பூதகுடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் 17, மதுரை கே. புதூரைச் சேர்ந்த கிருஷ்ணன் ஆகிய இரு சிறார்களை பிடித்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில், இருவருமே, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: