ஓடைப் பகுதியில் வெள்ளப் பெருக்கு..

செய்தி : ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோவில் ஓடை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வீடியோவால் வனத்துறை அதிர்ச்சி….

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவில் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பொதுமக்கள் இருப்பதுபோல் வெளியான வீடியோவால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக விவசாயிகளின் நீராதாரமாக விளங்கும் பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்மணிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள் ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மலை அடிவாரத்திலுள்ள சிறு சிறு ஓடைகளில் நீர்வரத்து அளவுக்கு அதிகமாக வரத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவில் சிற்றோடை என்ற பகுதியில் மாலை நேரத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சிலர் ஓடையில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது நீர்வரத்து அதிகம் இருந்த காரணத்தால் ஒருவரையொருவர் கையை பிடித்துக்கொண்டு ஓடையில் இருந்து வெளியேறினர். வெளியேறிய பின்பும் அவர்களை அழைத்து வந்த வாகனம் தாமதமாக செண்பகத்தோப்பு பகுதிக்கு வந்த காரணத்தினாலும் மேலும் அப்பகுதியில் செல்போன் நெட்வொர்க் இல்லாததாலும் அவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் செண்பகத்தோப்பு வாகனம் நிறுத்தும் இடத்திலேயே நின்றிருந்தனர்.

தொடர்ந்து அவர்களை அழைத்து வந்த வாகனம் வந்ததையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து கோவிலுக்கு வந்த பொதுமக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதிக்கு வந்தனர். இதனிடையே பேச்சியம்மன் ஓடையில் நீர் வந்தது தெரியாமலும் சாமி கும்பிட வந்தவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருந்ததையும் காலதாமதமாக அறிந்துகொண்ட வனத்துறை செய்வதறியாமல் திகைத்தனர். தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களை எச்சரித்து இனிவரும் காலங்களில் தங்களின் அனுமதியின்றி பேச்சியம்மன் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். நீர்வரத்து கட்டுக்குள் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: