மரம் சாய்ந்து ஒருவர் பலி

சோழவந்தான் அருகே மரம் விழுந்து ஒருவர் பலி:

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே மரம் சாய்ந்து ஒருவர் இறந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
சோழவந்தான் தெற்குரத வீதியைச் சேர்ந்த முத்துப் பாண்டி 44 இவரும், அவரது நன்பரும் மோட்டார் சைக்கிளில், சென்று கொண்டிருந்தனர்.
சோழவந்தான் அருகே கொடிமங்கலத்தில் சாலையோரமாக இருந்த மரமானது, மோட்டார் சைக்கிள் மீது சாய்ந்ததில், முத்துப்பாண்டி அடிபட்டு இறந்தார்.
மற்றொருவர் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமணையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டார்.
இறந்த முத்துப்பாண்டிக்கு, லெட்சுமி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: