கஞ்சா கடத்திய நான்கு பேர் கைது

வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா
4 பேர் கைது :

மதுரை மாநகர்

அண்ணாநகர
காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதன்
கிடைத்த இரகசிய தகவலின் பேரில், சார்பு ஆய்வாளர் மணிமாறன்
சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜு அழகுபாண்டி மற்றும் மதன்குமார் ஆகியோர் மதுரை வண்டியூர் சங்குநகர் பாலம் அருகே போதை பொருள்தடுப்பு சம்பந்தமாக கண்காணித்து கொண்டிருந்த போது ,
சந்தேகப்படும்படியாக
வந்த
வாகனத்தை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது வாகனத்தின் ஒட்டுனர்
ரவி 39,
தமிழ்குமார் 33,
முருகன் 24,
பரமேஸ்வரன்
ஆகியோர் வாகனத்தின் பின்னால் அமர்ந்தும் வந்தவர்களை விசாரணை செய்த போது,
மேற்படி நால்வரும்
வாகனத்தில் சென்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இனம் தெரியாத நபரிடம் இருந்து சுமார் 6.200 கி.கிராம் போதைப் பொருளான கஞ்சாவினை மொத்தமாக வாங்கி
வாகனத்தின் சீட்டிற்கு கீழ் மறைத்து வைத்துக் கொண்டு இராமேஸ்வரம் பக்கம் சென்று விற்பனை செய்ய கொண்டு செல்வதாக கூறியவர்களை கைது செய்து வாகனத்தையும் கஞ்சாவினையும், மதுரை அண்ணாநகர் போலீஸார் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: