பண்ணீர்செல்வமான பேச்சீமுத்து.

பேச்சிமுத்து பன்னீர்செல்வமாக மாறியது!!
பெரியகுளத்து நாயகனே! இந்த வார்த்தையை சொன்னவுடனே முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது ஓபிஎஸ் தான். இரண்டு முறை ஓபிஎஸ் ஐயாவை சட்டமன்ற உறுப்பினராக்கிய தொகுதி பெரியகுளம். பிறந்து வளர்ந்தது எல்லாம் பெரியகுளம் என்றாலும், இவருக்கு பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர்.
வறுமையால் வாடிய இவரது முன்னோர்கள் “ஊர்விட்டு ஊர்மாறினால் நல்ல காலம் பிறக்கும்” எனக்கருதி புலம்பெயர்ந்த ஊரே பெரியகுளம்.
பெரியகுளத்தில் விவசாயத்தை முக்கியத் தொழிலாக பார்த்து வந்த ஓபிஎஸ் அவர்களின் தந்தை ஓட்டக்காரத் தேவர், பழனியம்மாள் என்ற உறவுக்காரப் பெண்ணையே திருமணம் புரிந்தார்.
இத்தம்பதியருக்கு மூத்த மகனாக 1951 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைத்திருநாளன்று (14-01-1951) பிறந்தவரே பேச்சிமுத்து என்ற பன்னீர்செல்வம்.
பேச்சிமுத்து என்பதே ஓபிஎஸ் ஐயாவின் இயற்பெயர். இப்பெயர் சூட்டியதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று, பொதுவாக தங்களது குலதெய்வப் பெயரையே குடும்ப வாரிசுகளுக்கு பெயர் சூட்டும் வழக்கத்தை இவர்களது குடும்பம் மேற்கொண்டு வந்ததால், மூத்த குழந்தையான ஓபிஎஸ் ஐயாவிற்கும் பேச்சிமுத்து எனப் பெயர் சூட்டினர்.
இன்னொரு காரணம் ஓபிஎஸ் ஐயா அவர்களின் பெரியப்பா பெயரும் பேச்சிமுத்து. அந்த காலத்தில் பெரியகுளம் முனிசிபாலிட்டி துணை சேர்மன் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்து ஊர் மெச்ச பல சிறப்புகளை பெற்றார் இவர்.
அவரைப் போலவே இக்குழந்தையும் பல புகழ்ச்சிகளைப் பெற வேண்டும் என்பதால் இவர்க்கு இப்பெயர் சூட்டப்பட்டது. அதன் படியே பின்னாளில் இக்குழந்தை ஒரு மாநிலத்தையே ஆண்டது என்பது வரலாறு.
இயற்பெயரான பேச்சிமுத்து பன்னீர்செல்வமாக மாறியது எப்போது?
பேச்சிமுத்து…
பேச்சிமுத்து… என சொந்தபந்தங்கள் அக்குழந்தையை பாராட்டி அழைத்து வந்தாலும் ஓபிஎஸ் அவர்களின் பாட்டி மட்டும்
பன்னீர்… பன்னீர்… என அழைத்து வந்தார்.
பின்னாளில் பன்னீரோடு சேர்த்து செல்வம் என்ற பெயரையும் இணைத்து
பன்னீர்செல்வம்…
பன்னீர்செல்வம்… என சூட்டி அவர் அழைத்தது அனைவரையும் கவர,
பாட்டியோடு சேர்ந்து அனைவரும் பன்னீர்செல்வம் என அழைத்து வரலானார்கள்.
அந்த பேச்சிமுத்து என்ற பன்னீர்செல்வம் தான் பின்னாளில் மூன்றுமுறை தமிழ்நாட்டை ஆண்டு, இன்றும் மக்கள் மனங்களை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அதிமுகவின் மூன்றாம் தலைமுறையாக புரட்சித்தலைவர் உருவாக்கிய மக்கள் இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
நாட்டுக்கு நான் பன்னீர் செல்வமாக இருந்தாலும்;
நம்ம ஊருக்குள்ள எப்பவும் பேச்சிமுத்து தான்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: