நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞ ர் அணி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, திமுக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்:

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே 15.பி. மேட்டுப்பட்டியில் திமுக இளைஞரணியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.
அதன்பேரில், அலங்காநல்லூர் பி. மேட்டுப்பட்டியில், திமுக இளைஞரணியினர் அதன் அமைப்பாளர் தனிச்சியம் மருது தலைமையில், துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, நிர்வாகிகள் விஜயராகவன், சுந்தர் உள்ளிட்டோர், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: