அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைச்சர ் ஆய்வு…

சென்ட்ரல் மார்க்கெட் கட்டுமான பணிகள்: அமைச்சர் ஆய்வு

மதுரை

மதுரையில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் மதுரை மாநகராட்சியின் சார்பில் கட்டப்பட்டு வரும், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தை, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த இடத்தில் தான் பல வருடங்களாக காய்கறி சந்தை நடைபெற்றது.
இடநெருக்கடி காரணமாக மாட்டுத்தாவணி அருகே சென்ட்ரல் மார்க்கெட் மாற்றப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்த இடத்தில் மதுரை மாநகராட்சியின் சார்பில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் பணியானது நடைபெற்று வருகிறது.
இப் பணியினை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மாநகராட்சி ஆணையர் விசாகன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் கூட்டுறவு அங்காடி தலைவர் ஜெ. ராஜா, முன்னாள் துணை மேயர் திரவியம், கல்வியாளர் கிரம்மர் சுரேஷ், அதிமுக பிரமுகர் சோலை ராஜா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: