கீழடி அருங்காட்சியகம் கட்டுமானப் பணி..

கீழடி அருங்காட்சியகம் கட்டுமான பணி!!!

*கீழடி கள அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகள் துவக்கம்;

தமிழகத் தொல்லியல் துறை சார்பாக நடைபெற்றுவரும் கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களைக் கொண்டு கீழடியில் உலகத்தரம் வாய்ந்த கள அருங்காட்சியகத்திற்கு தமிழக முதல்வர் அவர்கள் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஜூலை 20ம் தேதி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து

தற்போது கள அருங்காட்சியத்திற்கான கட்டுமான பணிகள் தற்போது துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன

குறிப்பாக உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைய உள்ள இந்த இடத்தில் தற்போது கட்டுமானப் பணிகளுக்கான பணிகளில் ஈடுபடக் கூடிய பணியாளர்கள் தங்குவதற்கான இடத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன .

அதேபோன்று அலுவலக பயன்பாட்டிற்கான கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன

ஏற்கனவே ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று கட்டுமான பணிகளுக்கு தேவைப்படக்கூடிய நீருக்காக ஆள்துளை கிணறு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது

குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமான பணிகளையும் முடிப்பதற்கான பணிகளில் கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: