ஆக்கிரமிப்பை அகற்ற தேசீயக்கொடி ஏந்தி நூத னப் போராட்டம்…

,நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தேசியக் கொடி ஏந்தி போராடிய ஊர் மக்கள்…..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ளது தம்பிபட்டி. தம்பிபட்டி ஊராட்சிப் பகுதியில் சாலையின் இருபுறமும் கடைகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாயும் அடைக்கப்பட்டுள்ளதால், நடைபாதைகளில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. நீர் வரத்துப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், கடந்த 17 ஆண்டுகளாக தம்பிபட்டி கண்மாய்க்கு நீர் வரத்து முற்றிலும் இல்லாமல் போனது. இதனால் இந்தப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்துப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் பல முறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தம்பிபட்டி ஊர் மக்கள், ஊராட்சி அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து ஆக்கிரமிப்புகளும் சுதந்திரமான முறையில் அகற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கைகளில் தேசியக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊர் பொதுமக்கள் தேசியக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: