மதுரை அருகே வீடுபுகுந்து 100 சவரன் நகை கொள ்ளை..

மதுரை அருகே துணிகரம்
வீடு புகுந்து 100 பவுன் நகை கொள்ளை

மதுரை:

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் ஓம்சக்தி நகரில் வீடு புகுந்து 100 பவுன் கொள்ளை இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே ஓம் சக்தி நகர் வசித்து வருபவர் போஸ் (வயது 55) தனியார் நிறுவன ஊழியர் இவரது மனைவி மரியம்மாள் (வயது 50) . இன்று மாலை மாரியம்மாள் ஜாதகம் பார்க்க சென்ற போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு 100 நகை பவுன் கொள்ளை அடிக்கப்பட்டது. குறித்து போய் அளித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகர காவல் துணைஆணையர் பழனிச்சாமி, உதவி ஆணையர் சிவராஜ் பிள்ளை, அவனியாபுரம் ஆய்வாளர் பெத்து ராஜ் .குற்ற பிரிவு ஆய்வாளர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர் .மேலும் தடய அறிவியல் துறையினர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் பரபரப்பாக நடமாடும் இப்பகுதியில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: