ஆதரவற்ற மாணவிக்கு உதவி…

ஆதரவற்ற மாணவிக்கு உதவிகள் புரிந்த மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்பி:

பாராட்டிய மாவட்ட மக்கள்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
பி.உமாமகேஸ்வரி
இன்று (7.9.2020) புதுக்கோட்டை
வட்டம்
போரம் கிராமத்தில் ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் சத்யாவிற்கு
விலையில்லா வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணையினை வழங்கினார்.
பின்னர் ,
மாவட்ட ஆட்சித் தலைவர்
தெரிவித்ததாவது:

புதுக்கேட்டை வட்டம்
போரம் கிராமத்தில் மனநலம் பாதித்த தாயுடன்
சத்யா என்பவர் மிகவும் வறுமை நிலையில் வசித்து வருவதாக செய்திகள்
வரபெற்றது. வீடற்ற நிலையில் மிகச்சிறிய குடிசை வீட்டில் சிரமத்துடன் வசித்து
வருவதாகவும்
அரசு தனக்கு புதிய வீடு கட்ட உதவுமாறு கோரிக்கை
விடுத்திருந்தார்.
இதுகுறித்து ,தகவல் அறிந்தவுடன் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்
உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி வட்டாட்சியர் மூலம் இடப்பார்வை மேற்கொள்ளப்பட்டது. குடிசை
இருந்த பகுதியில் பட்டா வழங்க இயலாத காரணத்தால் புதிய பட்டா வழங்கும்
வகையில் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்திற்கான பட்டா
ஆணை இன்றையதினம் சத்யாவிடம் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் புதிதாக பசுமை வீடும் கட்டித்தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிலையில், புதுக்கோட்டை போலீஸ் எஸ்பி சரவணன், மாணவி சத்யாவின் வீட்டுக்கு சென்று, கல்விச் செலவை ஏற்பதாக கூறியும், அதிக மதிப்பெண் பெற்றமைக்கு பரிசுகளை வழங்கினார்.
மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி, போலீஸ் எஸ்பி சரவணை கிராம மக்கள் பாராட்டினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: