மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கக் கூட்டம ்…

பேராவூரணி,செப்.06 –
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் ஏஐடியுசி வட்டார மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது..கூட்டத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தமிழக அரசின் சார்பாக நலவாரிய அட்டை வழங்க வேண்டுமெனவும் மணல் கிடைக்காத காரணத்தால் பேராவூரணி பகுதியில் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே மாட்டு வண்டியில் மணல் அள்ள முறையான அனுமதி வழங்கி தொழில் செய்ய தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் .
தினமும் பேராவூரணி பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆவுடையார் கோவில் காட்டாற்றில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்றுவர 60 கிலோ மீட்டர் தூரம் ஆகும் என்பதால் மாட்டு வண்டி ஓட்டிச் செல்ல சாத்தியமில்லை,அதனால், ரெட்டவயல் அம்புலி ஆற்றிலும் ,கட்டயங்காடு அக்னி ஆற்றிலும் மணல் அல்ல முறையான அனுமதி பெற்று குவாரிகள் அமைத்து மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்திற்கு பேராவூரணி வட்டார மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் கே.எஸ்.முருகேசன் தலைமை வகித்தார். வட்டார தலைவர் எம்.வீரமணி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் ,சிபிஐ ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் சித்திரவேலு , வட்டாரச் செயலாளர் டி.பிரகாஷ் ,குமார், கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் இறுதியாக க.மூர்த்தி நன்றி கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: