வ.உ.சி. பிறந்தநாள் விழா..

பெரிய உர்சேரியில் வ.உ.சி. பிறந்தநாள் விழா

தேங்காய் பழம் உடைத்து மாலை அணிவித்தனர்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெரிய ஊர்சேரி கிராமத்தில், வ.உ.சி. பேரவையின் சார்பில், அவரது திரு உருவ சிலைக்கு தேங்காய் பழம் உடைத்தும், மாலை அணிவித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு, வ.உ.சி.பேரவைத் தலைவர் முத்துக் கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் விஜய் சதிஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் மணிமேகலை, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் செந்தில், ராகவன், வி.எஸ். சுந்தரம், செந்தில் உள்ளிட்டோர், வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதேபோல, சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம், அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக செயலர் ரவிச்சந்திரன், ஒன்றியக் கவுன்சிலர் ரேவதி உள்ளிட்டோர், வ.உ.சி.லைக்கு மாலை அணிவித்தனர்.
அலங்காநல்லூர் அனைத்து பிள்ளைமார் நலச்சங்கம் சார்பிலும், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் சீத்தாராமனும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: